செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,11,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,824 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,70,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 17 பேர் கொரோனாவால் உயிரிந்துள்ளனர். இதன் மூலம் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் ஒரே நாளில் 79,927 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 1,98,45,778 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,57,815 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,15,736 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 630 பேர் உயிரிந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 25.14 கோடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12,08,329 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,30,07,369 ஆக உள்ளது. கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,85,219 ஆக உள்ளது.

Advertisement:

Related posts

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்து; அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் உயிரிழப்பு!

Saravana

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

Jayapriya

தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!

Gayathri Venkatesan