இந்தியா முக்கியச் செய்திகள்

85 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!

இந்தியாவில் கடந்த 85 நாட்களாக இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை மொத்தம் 12,02,11,592 பேர் பாதிக்கப்படுள்ளனர், அதில் 4,93,75,113 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், 26,60,044 பேர் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,81,76,435 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 85 நாட்களில் இல்லாத அளவிற்க்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 26,291 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,85,339ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 118 பேர் கொரோனா தொற்றால் உயிழந்ததையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,58,725ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக கொரோனாவால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 20 அன்று டெல்லியில் அதிகபட்சமாக 26,624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று 26,291 பேர் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில்(மார்ச் 15) 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்களின்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 3,29,47,432 ஆக உள்ளது. இந்தியா உலக அளவில் கொரோனா தொற்றில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

Karthick

எம்.ஜி.ஆரின் அழகுக்கு அருகில் முடிந்தவரை என்னை அழைத்து சென்றவர் – மேக்கப் கலைஞருக்கு அரவிந்த் சாமி நன்றி!

Jayapriya

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

Gayathri Venkatesan