தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது; இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது, என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களும், அசாமில் 2 கோடியே 32 லட்சம் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் மேற்கு வங்கத்தில் 7 கோடியே 34 லட்சம் வாக்காளர்களும், கேரளாவில் 2 கோடியே 67 லட்சம் வாக்காளர்களும், புதுச்சேரியில் ஒரு கோடி வாக்காளர்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.

5 மாநிலங்களிலும் மொத்தம் 18 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக கூறிய, சுனில் அரோரா, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படாது என்றும், அவர்கள் வாக்களிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

நகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்!

Niruban Chakkaaravarthi

12-ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு!

Niruban Chakkaaravarthi

சிறுமி பாலியல் வழக்கில் 3 பேருக்கு 20 ஆண்டு சிறை!

Gayathri Venkatesan