தமிழகம் முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் கொரோனா பரவல் எதிரொலியாக 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகளுக்கு வரும் மே 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் இருவருக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மாணவர்கள் அனைவரையும் தனிமை படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த பரிந்தரையை ஏற்று, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மே 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்தார். 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் சிறப்பம்சங்கள்

Saravana

மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Saravana Kumar

மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது! – அமைச்சர் செங்கோட்டையன்

Saravana