இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!

தமிழ்நாடு உள்பட மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததின் காரணமாக புதிதாக 15,510 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடாகா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகிரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,68,627 ஆக பதிவாகிவுள்ளது. மகராஷ்டிராவில் தினசரி 8,293 போரும் கேரளாவில் 3,254 பேருக்கும் பஞ்சாபில் 579 பேரும் தொற்று பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, பிரேசில் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 213 பேருக்கு உறுமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள், முன் கள பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 60 வயது முதியோருக்கும் கொரனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:

Related posts

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!

Saravana Kumar

நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளை!

Jeba

சித்தாந்த ரீதியாக விமர்சனம் செய்யவேண்டும்: ஹெச்.ராஜா

L.Renuga Devi