தமிழகம் முக்கியச் செய்திகள்

புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் 20ஆம் தேதி வரை புதிய கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனவும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் எந்தத் தடையுமின்றி நடைபெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும்; தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வல நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கம்போல் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

“கருப்புப் பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும்” – சி.டி.ரவி!

Karthick

“தேர்தலில் வாக்கு சேகரிக்க அதிமுகவின் சாதனைகளே போதுமானது” – அமைச்சர் பாஸ்கரன்

Saravana Kumar

மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Niruban Chakkaaravarthi