செய்திகள் முக்கியச் செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பு!

இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்திருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி வலியுறுத்தப்பட்டது. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும், உரிய முறையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

12 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் நோய் தாக்கம் உள்ள பகுதிகளில் கடுமையான தனிமைப்படுத்துதல் முறைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.

46 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 71 சதவீதம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அதிநவீன எஃப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா!

Dhamotharan

“தனியாருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்!”: பிரதமர் மோடி

Karthick

தீவிரமடைகிறதா கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை?

Saravana Kumar