இந்தியா முக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.38 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 1027 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 82,339 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், நாட்டில் இதுவரை 1.23 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 11.11 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,23,36,036 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 13,65,704 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என விவாதிப்பது அபத்தம்’ ராகுல்காந்தி!

L.Renuga Devi

பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !

Gayathri Venkatesan

”நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்”- கமல்ஹாசன்!

Jayapriya