தமிழகம்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் திமுக 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது. இது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், தற்போதைய சூழலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதாலும் தாங்கள் 3 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தெரிவித்தார்.

அதைதொடர்ந்து பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!

Saravana

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

Gayathri Venkatesan

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

Nandhakumar