இந்தியா முக்கியச் செய்திகள்

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக்கொடி நாட்டிய காங்கிரஸ்!

பஞ்சாபில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.

109 முனிசிபல் கவுன்சில்களுக்கும், 7 முனிசிபல் கார்ப்ரேஷன்களுக்கும் பிப்ரவரி 14 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 71.39 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

மோகா, ஹோஷியர்பூர், கபூர்தலா, அபோஹர், பதன்காட், பாட்டாலா, பதின்டா ஆகிய முனிசிபல் கார்ப்ரேஷன் தேர்வு முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வெளிவந்துள்ளது. இதில் பதின்டா தொகுதியை காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியிலிருந்து சிரமோனி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் பாதல் எனும் பெண்மணி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருந்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

4 மொழிகளில் வெளியாகும் GODZILLA VS KONG திரைப்படம்!

Jeba

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: SpaceX நிறுவனம் சாதனை!

Jayapriya

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

Ezhilarasan