தமிழகம் முக்கியச் செய்திகள்

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


சென்னை விருகம்பாக்கத்தில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி, திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. மோடி, எடப்பாடிக்கு எதிராக பேச அதிகம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் அதை அதிக அளவில் மக்கள் இடத்தில் பேச வேண்டும் என்று தெரிவித்தார். சமையல் செய்யும் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றதை ஒரு கோடி பேர் பாத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது எனவும், இந்தியாவில் உள்ள எல்லா திட்டங்களையும் காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்று குறை சொல்லி வருகின்றனர். ஆனால் அதை ஏன் மத்திய அரசு தடுக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும், விவசாயிகளுக்கு விருப்பமில்லாத இந்த வேளாண் சட்டங்களை அரசு நீக்க வேண்டும், ஆனால் அதை செய்ய மத்திய அரசு மறுக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

Advertisement:

Related posts

நாட்டின் பாதுகாப்பில் முற்றிலும் சமரசம்: சோனியா குற்றச்சாட்டு

Saravana

சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டி; ஜிகே.வாசன் அறிவிப்பு..

Jayapriya

மாஸ்டருக்கு காப்புரிமை பிரச்னை… சிக்கலில் தயாரிப்பு நிறுவனம்!

Jayapriya

Leave a Comment