செய்திகள்

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது!

கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிலையை அகற்றியது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காததையும், சிலையை அமைப்பதற்காக போடப்பட்ட கான்கிரீட் தளம் தரமாக இல்லாததையும் கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர், தர்ணாவில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி கைது செய்ய முயன்றனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஜோதிமணி உட்பட 50க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement:

Related posts

பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டது குறித்து விளக்கிய அமைச்சர்

Niruban Chakkaaravarthi

பொங்கல் பண்டிகை; சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Saravana

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்!

Niruban Chakkaaravarthi