செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நீட் தேர்வு ரத்து செய்ய உறுதி

சென்னை சத்திய மூர்த்தி பவனில் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

ஆவணப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கையெடுக்கப்படும்.

காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட நடவடிக்கையெடுக்கப்படும்.

சாதி திருமணம் செய்தவர்களுக்கு அனைத்து பணிகளிலும் சலுகை வழங்கப்படும். மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால் அவர்களைப் பாராட்டி ரூ . 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டு, தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்.

உள்ளாட்சிக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்.

குடும்ப தலைவர் முதியோராக இருந்தால் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

பூரன மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

மண்டல் கமிஷனின் பரிந்துரைப்படி மீனவர்கள், பழங்குடியினர் படியலில் சேர்க்க வழிவகை செய்யப்படும்.

பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.

திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிபடுத்த , உச்சநீதிமன்ற உத்தரவின்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

சிவாஜி கணேசன் பிறந்த நாளை அக்.1 கலை எழுச்சி நாளாக அரசின் சார்ப்பில் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதம் ஒருமுறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் தேவையை கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல் புதிய மின் திட்டங்கள் தொடங்கப்படும்.

கோவில்களில் , இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி அஞ்சல் மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.

Advertisement:

Related posts

“முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”: உத்தவ் தாக்ரே

Karthick

டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

Gayathri Venkatesan