தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மளிகைக் கடனையும் முதல்வர் ரத்துசெய்திருப்பார்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற லட்சியத்தை நோக்கியே திமுக- காங்கிரஸ் கூட்டணி, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.


காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதியாக பாஜக விளங்குகிறது என குற்றஞ்சாட்டினார். மத்திய அமைச்ரவையில் கேள்வி- பதில் அனைத்தும் இந்தி மொழியில் தான் இடம்பெறுவதாக கூறிய அவர், தேர்தலின் மூலம் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

மேலும் திமுக – காங்கிரஸ் கட்சி சரித்திர வெற்றியை ஈட்டும் என்ற அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற லட்சியத்தை நோக்கியே பயணிக்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தினார். தமிழக முதல்வர் நான்கு ஆண்டு காலம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் கடைசி நேரத்தில் தள்ளுபடிகளை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்ற ப.சிதம்பரம், தேர்தல் தேதி அறிவிக்க 30 நிமிடம் தாமதமாகி இருந்தால் மளிகை கடன் ரத்து ,கைமாத்து கடன் ரத்து என அறிவித்திருப்பார் முதல்வர் என்றும் குற்றம்சாட்டினார்.

Advertisement:

Related posts

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

Jayapriya

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

Jayapriya

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் ஜாக் மா!

Jayapriya