கடந்த 5 ஆண்டுகளில் செய்யாததை எல்லாம் மூன்று மாதத்துக்குள் செய்ய முதல்வர் திட்டமிட்டிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
அண்மையில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுபோலவே ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட முக்கிய முடிவுகளையும் அறிவித்தார்.
இந்த நிலையில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், தமிழகத்தில் ஆளும் அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதாக சொல்லிக் கொள்வதாக கூறினார்.
முதல் 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அகங்கார ஆட்சி நடைபெற்றதாக விமர்சித்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் செய்யாததை எல்லாம் இந்த மூன்று மாதத்தில் செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். அது அனைத்தும் கேலிகூத்தாக உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
Advertisement: