ஆசிரியர் தேர்வு தமிழகம்

“கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசு மீது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வாங்கிய மனுக்களை, ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சி தான் என விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் மக்கள் தான் முதலமைச்சர், என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகவும், CAA எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட, வன்முறை மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆகிய வழக்குகளை தவிர, சுமார் 1,500 வழக்குகள் கைவிடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மேலும், கூடங்குளம் போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

Nandhakumar

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்! – கனிமொழி

Nandhakumar

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

Jayapriya