செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

புதுக்கோட்டையில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணியாக சென்றனர்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கனவான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கும், விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளம் பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் இன்று 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா; நெருக்கடியில் நாராயணசாமி அரசு!

Gayathri Venkatesan

பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம்: நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை!

Saravana

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!

Jayapriya