முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ஓலப்பட்டியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது இவ்வாறு கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று விமர்சித்தார்.
10 ஆண்டுகளாக நீர் மேலாண்மைத்துறையில் என்ன செய்தீர்கள்?, என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட முடியுமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்களின் 70 சதவீதம் பேர் அதிமுகவினர் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
எடப்பாடி தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்றும், மாம்பழக் கூழ் தொழிற்சாலை, ஜவுளி பூங்கா கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதிகளை, அதிமுக நிறைவேற்றவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார். மேலும், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில், எடப்பாடி தொகுதியில் தான் முன்னோடி தொகுதியாக திமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டார்.
Advertisement: