இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் காந்திமுர்த்தியிலிருந்து ஹஸ்ரா பகுதி வரை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பேரணியை தொடங்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இம்மாத இறுதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் அவரின் சவாலை ஏற்று அதே தொகுதியில் மமதாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த புதன் கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு தாக்குதலில் மமதாவின் கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், நான் சக்கர நாற்காலியில் அமர்ந்தே பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கொல்கத்தாவில் காந்திமுர்த்தியிலிருந்து ஹஸ்ரா பகுதி வரை மமதா பானர்ஜி பேரணியை தொடங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதி!

Jayapriya

தலைமை ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!

Karthick

20 வயதில் இந்தியாவின் முதல் லைன்வுமென்; சாதனை படைத்த தெலங்கானா பெண்!

Saravana