விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் பழனிசாமி விருது வழங்கி கௌரவித்தார்.
2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழக அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட அவர்கள் அனைவருக்கும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கவுரவித்தார். அத்துடன் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விருது பெற்றவர்கள், தமிழக அரசு தொடர்ச்சியாக விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர். அத்துடன் அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து தங்களை ஊக்குவித்து வருகிறது. மேலும், தங்களுக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வருக்கு நன்றி என தெரிவித்தனர்.
Advertisement: