செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையும் சாதகமாக இருக்கிறது: முதல்வர்!

அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல், இயற்கையும் சாதகமாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாகவும், அடுத்த ஆண்டு, 600 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் நல்ல பலனை கொடுத்துள்ளதாகவும், தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

15 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!

Jeba

கொரோனா தடுப்பூசிக்கு டெல்லி அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தகவல்!

Saravana

அதிமுகவிற்காக களமிறங்கிய கார்த்திக்!

Niruban Chakkaaravarthi