அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், திமுக மீதான குற்றச்சட்டுகளை முன்வைத்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுள்ளதாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல் நூற்றுக்கணக்கான சாதனைகளை, அதிமுக அரசு செய்துள்ளதாகவும் வீடியோவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்தது யார்?, நீட் தேர்வை திணிக்க ஆதரவாக நின்றது யார்?, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கையெழுத்திட்டது யார்?, என முதலமைச்சர் அடுக்கடுக்கான கேள்விகளை வீடியோவில் முன்வைத்துள்ளார்.
Advertisement: