செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மு.க. ஸ்டாலினின் நடிப்பு மக்களிடம் எடுபடாது: முதல்வர் பழனிசாமி!

மு.க. ஸ்டாலினின் நடிப்பு மக்களிடம் எடுபடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை எம்எம்டிஏ காலனியில் அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மழை, வெள்ளம், புயல் காலங்களில் மக்களுக்காக அதிமுக அரசு பணியாற்றியதை சுட்டிக்காட்டினார். சென்னை மாநகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினின் நடிப்பு மக்களிடம் எடுபடாது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை அசோக்நகரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதேபோல் சென்னை மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!

L.Renuga Devi

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியாகிறது!

Saravana

மொத்த வாக்காளர்கள் 90, பதிவான வாக்குகள் 181: அசாம் மாநில தேர்தல் குளறுபடிகள்!

Karthick