செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!

அதிமுக அரசு நீர்மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி வந்ததாகவும், சொட்டு நீர் பாசனத்துக்கான மானியம், இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழகத்தில்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வாஷிங்மெஷின் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும், கேபிள் டிவி இணைப்பு இலவசமாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோது, விவசாயிகளுக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டதாக வந்தவாசி பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் ஏரிகளை, ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிமராமத்து திட்டன்கீழ் சீரமைத்ததாக அவர் குறிப்பிட்டார். கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருவதாக கூறிய முதலமைச்சர், வறட்சி ஏற்பட்டபோது, விவசாயிகளுக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டதாக கூறினார்.

Advertisement:

Related posts

இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம்: 4 பேருக்கு சம்மன்!

Karthick

வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 60 வயது முதியவர்!

Jayapriya

முகக் கவசத்தை அணிவதால் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும்: தடுப்பூசி திருவிழா- பிரதமர் மோடி வேண்டுகோள்

Karthick