தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்த திரைப்பிரபலங்கள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரைப்பிரபலங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல், தோல்வியடைந்தனர். சிலர் டெபாசிட்டை இழந்தனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரைத்துறை பிரபலங்களை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நடிகை குஷ்பு, மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் டெபாசிட்டை இழந்தனர்.

Advertisement:

Related posts

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

Saravana

பத்தாண்டு காலமாக செய்யாததையா தற்போது அதிமுக செய்துவிடப்போகிறது: உதயநிதி ஸ்டாலின்!

Saravana Kumar

4 மொழிகளில் வெளியாகும் GODZILLA VS KONG திரைப்படம்!

Jeba