ஆசிரியர் தேர்வு விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் மோரிஸ்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ்மோரிஸ் பெற்றுள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கான 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் ஆயிரத்து 114 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதன் இறுதி பட்டியலில், 164 இந்திய வீரர்களும், 128 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 292 பேர் இடம் பெற்றனர். இதனையடுத்து தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில், ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை 2 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை அணிக்கும், பெங்களூர் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கிளென் மேக்ஸ்வெல்லை 14 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு, பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிசை 16.கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி . 14 கோடிக்கு எடுத்துள்ளது. தமிழக வீரர் ஷாருக்கானை 5 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கௌதமை 9.கோடியே 25 லட்ச ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா வீரர் ரிலே மெரிடித்தை .8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இந்திய வீரர் பியூஷ் சாவ்லாவை 2.கோடியே 4 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.

இந்திய வீரர் புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. இங்கிலாந்து வீரர் டாம் குரியன் 5.கோடியே 25 லட்ச ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. நியூசிலாந்து வீரர் கைல் ஜேமீசனை 15 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. ஜே சுசித்தை .30 லட்சம் ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

Advertisement:

Related posts

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!

Nandhakumar

தோனி ஓய்வை அறிவித்த தினம்: நினைவுகூரும் ரசிகர்கள்

Niruban Chakkaaravarthi

செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!

Nandhakumar