உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி

சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புது டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் சீனாவிற்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. இதன்காரணமாக சீனாவில் படித்துவந்த 23-ஆயிரம் இந்திய மாணவர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்கள். இந்தியாவில் சீன மொபைல் செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டாதல் சீனாவில் படித்துவந்த இந்திய மாணவர்கள் தங்களுடைய படிப்பை ஆன்லைனில்கூட தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் வெளிநாட்டுப் பயணிகள், மாணவர்களை அனுமதிக்கச் சீன அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிட் – 19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே மீண்டும் விசா வழங்க சீன அரசு முடிவுச் செய்துள்ளது. இதனால் சீனா வந்து படிக்கவுள்ள இந்திய மாணவர்கள் கண்டிப்பாகச் சீனத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். பிற நாட்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தங்களுடைய நாட்டில் அனுமதிக்கும் முறை குறித்த பரீசிலிக்கப்பட்டுவருகிறது. ஆனால் அதுவரை சீனா தயாரித்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் மட்டுமே சீனாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Advertisement:

Related posts

தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறியதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!

Gayathri Venkatesan

மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்த்த இளைஞனை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த தாய்!

Jayapriya

இயற்கை எரிபொருளின் தேவையை வலியுறுத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Niruban Chakkaaravarthi