உலகம்

உருவாகிய இடத்திற்கே திரும்பிய வைரஸ்; சீனாவிலும் பரவியது புதிய வகை கொரோனா தொற்று!

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தற்போது சீனாவில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று சாதாரண கொரோனாவை காட்டிலும் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டன் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பயணத்தடைகளை விதித்துள்ளன. இதனிடையே பிரிட்டனை தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அந்நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் முதல் முதலில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு பரவிய சீனாவில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 14 ஆம் தேதி 23 வயது நிரம்பிய இளம் பெண் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திற்கு விமானத்தில் வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

கொரோனாவால் மேலும் 20 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள்: ஐநா கவலை!

Dhamotharan

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கிரெட்டாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்!

Karthick

ஸ்மார்ட்ஃபோன் மூலம் 30 நிமிடத்தில் துல்லியமான கொரோனா பரிசோதனை; விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

Saravana

Leave a Comment