சீனாவில் தயாரிக்கப்பட்ட 2வது கொரோனா தடுப்பூசியை பொதுமக்களிடம் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளின் இயக்கத்தையும் முடக்கியது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் கொரோனா தடுப்புசி போடும் பணியை தொடங்கி விட்டன.
சீனா இதுவரை அரசுக்கு சொந்தமான சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வந்தது. இந்நிலையில், தற்போது சீனாவின் 2வது உள்நாட்டு தயாரிப்பான ‘கொரோனாவாக்’ தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவாக் தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், மருந்தின் செயல் திறன் மற்றும் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கொரோனாவாக் தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த சீனாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
Advertisement: