செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், திமுக மட்டுமே 120 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. 152 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, வரும் 7 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.

கொரோனா காரணமாக, ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுகிறது. இதில், திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்.

இதற்கிடையே, முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். காவல்துறை டி.ஜி.பி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!

Gayathri Venkatesan

“கருப்புப் பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும்” – சி.டி.ரவி!

Karthick