தமிழகம்

7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான பரிந்துரை குறித்து முதல்வர் அறிவிப்பு!

7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான பரிந்துரை ஒரு மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இன்று ராமநாதபுரத்தில் பிரச்சாரம் தொடங்குவதற்கான வந்த அவரை மாவட்ட எல்லையான பார்த்தீபனூரில் ஏராளமான அதிமுகவினர் திரண்டு வரவேற்றனர். மரிச்சுகட்டி பகுதியில் ஆடு வளர்ப்போர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். பின்னர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், காவிரி-குண்டாறு திட்டத்தில் ராமாநாதபுரம் மாவட்டம்தான் அதிக பலன் பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர் பார்த்தீபனூரில் நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடிப் பழனிசாமி, ஏழு உட்பிரிவுகளை அடக்கியவர்களை தேவேந்திர குல வேளாளர் அந்தஸ்துடன் ஒரே பெயரில் அழைப்பதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதை சுட்டிக்காட்டினார். இந்த பரிந்துரை 30 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது! – ராகுல்காந்தி

Nandhakumar

விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்த போது 12ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

Jayapriya

வாக்குகளுக்காக இரட்டை வேடமிடுகிறது திமுக: -எல்.முருகன் விமர்சனம்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment