தமிழகம் முக்கியச் செய்திகள்

ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்!

சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. நினைவு இல்லத்தை திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முன்பகுதியில் இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவு இல்லத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து, நினைவு இல்ல பெயர் பலகை மற்றும் கல்வெட்டை திறந்துவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்பரையில் குத்து விளக்கேற்றினார். இதன் பின்னர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றிவிட்டு நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.

Advertisement:

Related posts

நேர்மையான நல்லாட்சியை வழங்குவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Karthick

கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கவுரி அம்மா காலமானார்!

Karthick

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!

Saravana Kumar

Leave a Comment