பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக ஆட்சி முடியபோகிறது என்பதால் தான் தினமும் அபத்தமான நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் அரங்கேற்றி வருவதாக தெரிவித்தார். தமிழக பட்ஜெட்டில் ஏராளாமான கற்பனைகளை எடப்பாடி பழனிச்சாமியும் நிதி அமைச்சர் பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளதாகவும், அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனை 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் என்றும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்ட மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடி, திமுகவை குற்றஞ்சாட்ட உரிமை இல்லை என தெரிவித்தார்.
பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா என மோடி பேசியதை சுட்டிக்காட்டிய மு.க ஸ்டாலின், மோடியை பார்த்து மோடியா லேடியா என கேட்டவர் தான் ஜெயலலிதா என குறிப்பிட்டார்.
Advertisement: