தமிழகம் முக்கியச் செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை : மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரே மேடையில் திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பவன் தான் இல்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின் எப்போதும் தாம் மக்களுக்கு துணையாக இருப்பதாகக் கூறினார். தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க வேண்டிய தேர்தல் இது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளதாகக் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை என்றும், மோடி, அமித்ஷாவுக்கு அடிபணிந்து இருக்கக்கூடிய ஆட்சியாக, அதிமுக ஆட்சி இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

Advertisement:

Related posts

“மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன்”: செல்லூர் ராஜூ

Karthick

“தமிழ் மொழியின் இலக்கிய வளம் மிகவும் அற்புதமானது” – பிரதமர் மோடி!

Jeba

விவசாயிக்கும் – வியாபாரிக்கும் இடையே நடக்கும் தேர்தல்: அன்புமணி ராமதாஸ்

Karthick