இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 பாதுகாப்பு படை வீரர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்-சுக்மா மாவட்ட எல்லையில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த நக்சல் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட வீரர்களை நக்சல் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
இதனை தொடர்ந்து என்கவுன்டர் நடைபெற்ற பகுதியில், கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது 22 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்நிலையில் ஜக்தல்பூரில் நக்சல் தாக்குதலில் மீட்கப்பட்ட 14 பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மத்திய, மாநில அரசாங்கங்கள் நக்சல் தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுகின்றன. பழங்குடிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை தடுக்கும் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகப் அரசு போராடும். நக்சல்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த யுத்தம் தீவிரமடையும். இறுதியில் நாம் வெற்றிபெறுவோம். கடந்த ஆண்டு நக்சல்களுக்கு எதிராக மத்திய பாதுகாப்பு படை முகாம்கள் அமைத்தது. இது நக்சல்களை எரிச்சலூட்டியுள்ளது. தற்போது நடந்த இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் தவிர்க்கப்படும்” என்றார்.
இது குறித்து சத்தீஸ்கர் காவல் துறையினர் தெரிவித்துள்ள தகவலில், “நக்சல் தாக்குதலில் இதுவரை 22 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் 12 மவோயிஸ்ட்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற பிஜப்பூர்-சுக்மா வனப்பகுதியில் 400 மவோயிஸ்டுகள் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

Advertisement:

Related posts

அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!

Jeba

அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது:விஜய் வசந்த்

Karthick

தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

Karthick