செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை தமிழக அரசு குறைத்த நிலையில், இன்று முதல் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கையை அடுத்து, கடந்த வாரம் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. 70 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் 50 ரூபாயாகவும் 40 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாயாகவும் 60 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

காய்ச்சலுக்கு ஊசி போட்டு கொண்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

”மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் பழனிசாமி கொடுத்து வருகிறார்”- எஸ்.பி.வேலுமணி!

Jayapriya

மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3வது அணி அமையும்: கமல்ஹாசன்

Saravana