குற்றம் செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை: திருடனுக்கு வலைவீச்சு

சென்னையில் தொழிலதிபரின் வீட்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ஒரு லட்சம் ரோக்கம் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்ற விஸ்வநாதன், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. இதையடுத்து, அபிராமபுரம் காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகாரளித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

Nandhakumar

அமெரிக்காவில் முதல் முறையாக 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து தற்கொலை!

Nandhakumar