செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக மாநகராட்சி முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை நான்கு ஆயிரத்தை எட்டிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு ஆயிரத்தை கடந்து வருவதால், மாநகராட்சி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக மீண்டும் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்படும் என்றும், முழு வீச்சில் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Nandhakumar

பிரதமர் மோடிக்கு பரிசளித்த துபாய் வாழ் இந்திய வம்சாவளி சிறுவன்!

Jayapriya

மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தல் நாளை தொடக்கம்!

L.Renuga Devi