செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: டார்கெட் நிர்ணயத்த மாநகராட்சி!

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதமும்
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும் என
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதமும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம், தனிநபருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ. 500 விதிக்கப்படும், வணிக கடைகளுக்கு ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம், பொது இடங்களில் கிருமிநாசினி அடிக்கடி தெளித்து சுத்தம்செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக நாள் ஒன்றுக்கு அபராத தொகைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்டலம்- 1 20,000
மண்டலம்- 2 20,000
மண்டலம்- 3 50,000
மண்டலம்- 4 60,000
மண்டலம்- 5 1,50,000
மண்டலம்-6 60,000
மண்டலம்- 7 60,000

மண்டலம்- 8 1,00,000
மண்டலம்- 9 1,500
மண்டலம்-10 1,25,000
மண்டலம்-11 25,000
மண்டலம்-12 25,000
மண்டலம்-13 75,000
மண்டலம்-14 40,000
மண்டலம்-15 40,000
மொத்தம்- 10,00,000

மண்டல அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அலுவலர்களைக் கொண்டு விதி மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகையினை சென்னை மாநகராட்சி கருவூலத்தில் உடனுக்குடன் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்படக் கூடாது : பிரதமர் மோடி!

Ezhilarasan

பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

Jeba

அமர்நாத் குகைக்கோயில் பயணத்துக்கான முன்பதிவு தற்காலிக நிறுத்தம்!

Karthick