இந்தியா

CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ந் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சில பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வரும் சூழலில், CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார்.

இதன்படி, CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூலை 15-ம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். மேலும், பொதுத்தேர்வு முழுவதும் Shift அடிப்படையில் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

உச்சபட்ச தயார் நிலையில் முப்படைகள்: பிபின் ராவத் தகவல்!

Jayapriya

மேற்கு வங்கத்தில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்: அமித்ஷா

Niruban Chakkaaravarthi

சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!

Nandhakumar

Leave a Comment