காவிரி-குண்டாறு திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கனவான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளையும், மற்றும் விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார். இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளம் பெற்றிடும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் 6,941 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
Advertisement: