இந்தியா முக்கியச் செய்திகள்

பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை வெளியிட்டது நக்சல் அமைப்பு!

சத்தீஸ்கரில் தாங்கள் பிடித்து வைத்துள்ள பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை வௌியிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு!

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் சிலரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று ஜம்முவை சேர்ந்த கோப்ரா அமைப்பைச் சேர்ந்த ராகேஸ்வர் சிங் என்கிற பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை மாவோயிஸ்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு படைவீரர் உயிருடனும், பாதுகாப்புடனும் இருப்பதாகவும் கூறியுள்ள மாவோயிஸ்ட் அமைப்பு, வீரரை விடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இதுகுறித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படைவீரரை கைதுசெய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படைவீரரின் குழந்ழதை தனது தந்தையை விடுவிக்கக்கோரி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

என் தந்தை நிறைவேற்ற நினைத்த திட்டத்தை நான் நிறைவேற்றுவேன்: விஜய்வசந்த்

Saravana Kumar

ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

Gayathri Venkatesan

தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!

Gayathri Venkatesan