இந்தியா முக்கியச் செய்திகள்

கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த ஊழியர் இருவர் உயிரிழப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் வேதனை

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் மற்றும் மனித கழிவை அகற்றக் கட்டாயப்படுத்தப்பட்ட தூய்மை பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட இருவேறு வழக்குகள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள மத்தூர் டவுன் நகராட்சியில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யத் தொழிலாளர்களுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத காரணத்தால் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கி உயிரிழந்தனர். அதேபோல் தூய்மை பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவரை மனித கழிவை அகற்றக் கட்டாயப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த அவர் தற்கொலைச் செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணையைக் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி மாநில அரசுக்குத் தொழிலாளர்கள் உயிரிழப்புகள் குறித்த உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். அதேபோல் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும். இதுபோன்ற உயிரிழப்புகள் நடப்பதைத் தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement:

Related posts

காய்ச்சலுக்கு ஊசி போட்டு கொண்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

Niruban Chakkaaravarthi

2020ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்; ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகள்!

Jayapriya