தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதற்கு அடுத்த சனி (13), ஞாயிறு (14) கிழமைகள் விடுமுறை பிறகு கடந்த 15-ம் தேதி முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த 12-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று வரை 3,997 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3,332 பேர் ஆண்கள், 664 பேர் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி இடைத்தேர்தல்

சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தற்போது நேற்று மாலை வரை 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஹெச். வசந்தகுமாரின் மகன், விஜய் வசந்த ஆகியோர் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைப்பெற்றுவருகிறது. இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுதாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை தொடங்குகிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற வரும் 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

Advertisement:

Related posts

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி புதிய கட்சி தொடங்க முடிவு!

Niruban Chakkaaravarthi

தமிழகத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய திட்டங்களுக்கான முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Niruban Chakkaaravarthi

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர்!

Karthick