கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியருக்கு 52 லட்சம் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களில் உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசு, கண்ணை இமை காப்பதுபோல, மக்களை பாதுகாத்து வருகிறது. எனினும், அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார் என தெரிவித்தார்.
Advertisement: