கச்சத் தீவை மீட்டுத் தருமாறு திமுக தலைவரிடம் மனு கொடுத்தால், 100 நாட்களில், அவரால் மீட்டுத் தர முடியுமா என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில், செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட 5 புதிய சாலைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சாலைகள் போடப்படவில்லை என பேசிய திமுக எம்.பி கனிமொழி, எந்த இடத்தில் சாலை போடப்படவில்லை என்பதை கூறவில்லை என்று குற்றம்சாட்டினார். மக்களின் குறைகளை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்பதாகவும், ஆனால், அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என குறிப்பிட்ட ராஜன் செல்லப்பா, கச்சத் தீவை மீட்டுத் தர வேண்டும் என ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாட்களில் அவரால் மீட்டுத்தர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
Advertisement: