தமிழகம் முக்கியச் செய்திகள்

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்: எஸ்.பி.வேலுமணி கோரிக்கையையடுத்து முதல்வர் அறிவிப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் தேதி கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுனாபுரத்தில் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் கபர்ஸ்தான் அமைக்கப்பட்ட கபர்ஸ்தானை இஸ்லாமியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கபர்ஸ்தான் சாவியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்புகளிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் கோவை ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளருமான அப்துல் ஜப்பார், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழக முதல்வரிடம் ஆவன செய்ய எஸ்.பி. வேலுமணியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இது குறித்து பேசிய வேலுமணி, கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், நியாமான கோரிக்கைக்யை முதல்வர் ஏற்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட பிரச்சாரத்தின் போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கோவை இஸ்லாமிய அமைப்புகள், இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதல்வருக்கும் ,அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

இடைக்கால பட்ஜெட்: அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை!

Nandhakumar

“எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!

Jayapriya

வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

Jeba