உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

இளம் பெண் பில்லினியரானார் பம்பிள் செயலி நிறுவனர் வைட்னே உல்ப்ஃ ஹர்டு!

ஆன்லைனில் இரண்டாவது பெரிய டேட்டிங் செயலியான பம்பிளின் நிறுவனர் 31 வயதான வைட்னே உல்ப்ஃ ஹர்டு இளம் வயது பெண் பில்லினியராகியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவரான வைட்னே உல்ப்ஃ ஹர்டு (31), டேட்டிங் செயலி பம்பிளை உருவாக்கியவர். பம்பிள் நிறுவனத்தில் வைட்னே தலைமையில் பெருவாரியாக பெண்களே பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின் பங்கு 43 டாலர்களில் இருந்து 76 டாலர்களாக உயர்ந்து பங்கு சந்தையில் வர்த்தகமாகி உள்ளது.

இதனால் தற்போது வைட்னேவின் மொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 11 ஆயிரம் கோடியாகும். இதன் காரணமாக தனது 31 வயதிலே இளம் பெண் பில்லினியராக உள்ளார்.

டிண்டர் டேட்டிங் செயலி நிறுவனத்தில் பணியாற்றி வந்த வைட்னே, அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர் 2014ஆம் ஆண்டு பம்பிள் டேட்டிங் செயலியை உருவாக்கினார்
என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம்: பிரதமர் மோடி

Nandhakumar

அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை?

Niruban Chakkaaravarthi

டிராகன் பழத்தை ‘கமலம்’ என பெயர் மாற்றிய குஜராத் அரசு!

Jayapriya

Leave a Comment