உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

இத்தாலி நாட்டின் பிரபல ஆபரண வடிவமைப்பு நிறுவனமான போட்டெகா வெனெட்டா தொலைபேசி ஒயர் மாடலில் வடிவமைத்துள்ள நெக்லஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இத்தாலி நாட்டின் பிரபல ஆபரண வடிவமைப்பு நிறுவனமான போட்டெகா வெனெட்டா (Italian luxury fashion house Bottega Veneta) தன்னுடைய தனித்துவமான வடிப்பு காரணமாக உலகளவில் புகழ்பெற்றது.


இந்நிறுவனம் சமீபத்தில் வெள்ளியில் வடிவமைக்கப்பட்ட நெக்லஸ் மாடல் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தியது. பச்சை, லாவண்டர் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் இந்த நெக்லஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய நகையை போட்டெகா வெனெட்டா நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது. பொதுவாக போட்டெகா வெனெட்டா நிறுவனத்தின் ஆபரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுபவை. ஆனால் இந்த தொலைப்பேசி ஒயர் வடிவ நெக்லஸ் சமூகவலைத்தளத்தில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,45,189 ஆகும்.

Advertisement:

Related posts

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளயீடு!

Gayathri Venkatesan

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

Gayathri Venkatesan

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

Gayathri Venkatesan