உலகம்

போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் குடியுரிமை கேட்டு விண்ணப்பம்!

ஐரோப்பியாவில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் நாட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியேறியது. இதையடுத்து இனிமேல் இங்கிலாந்து நாட்டு வாசிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விசா இருந்தால்தான் பயணிக்க முடியும். இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டேன்லி ஜான்சன் பிரான்ஸ் நாட்டுக்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஸ்டேன்லி ஜான்சன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் எம்.பி-யாக பதவி வகித்தவராவார்.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறக் கூடாது என்று ஓட்டுப்போட்டவர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில் வானொலி ஒன்றுக்கு ஸ்டேன்லி ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், தமது குடும்பத்துக்கு பாரம்பரியமாக பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பு இருப்பதாக கூறி உள்ளார். தம்முடைய தாய், பாட்டி இருவரும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே தாம் மீண்டும் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்டேன்லி ஜான்சன் கூறி உள்ளார்.

Advertisement:

Related posts

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு; நெடுஞ்சாலைகளில் புதைந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

Saravana

62 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானம்… கடலில் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு?

Nandhakumar

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு!

Saravana

Leave a Comment